டோபமைன் தூறலே-அமேசான் லிங்

டோபமைன் தூறலே-அமேசான் லிங்

ஹாய் டியர்ஸ்...

அமேசான் நேரடி நாவலோடு வந்திருக்கேன்.

"டோபமைன் தூறலே"நேரடி புக்...படிச்சுட்டு உங்க ஸ்டார்ஸையும் ரீவீய்வையும் தட்டிவிடுங்க.

காதலும் ரொமான்ஸும் கலந்துக்கட்டி ஒரு இளமைத் துள்ளலோடு ஒரு நாவல்!

டீஸர்-1

அடுத்த நாள் காலையில் நீலிமாவைத் தேடிப்போனான். அவன் வந்ததும் அமைதியாகப் பார்த்தாள்.

“கொஞ்சம் தனியாகப் பேசணும்.உங்கப்பாவோட எங்கத் தங்கியிருக்க?”

இங்கப் பக்கத்துல ஒரு சின்ன வீடுதான். சீட்டுப் போட்டிருக்க வீடு நீங்கெல்லாம் வர்றளவுக்கு தகுதியான வீடு இல்லை. எதுன்னாலும் இங்கயே சொல்லுங்க. அப்படியென்ன ரகசியம் இருக்கப்போகுது நமக்குள்ள. அக்ரீமெண்ட் பத்திதானே பேசப் போறோம். அக்காவுக்கு தெரியாம பேசணும் அவ்வளவுதான். வாங்க வெளியே நின்னே பேசிக்கலாம் என்று முன்னாடி நடந்தாள்.

“அதில் கோபம் வந்தவன் இங்கப்பாரு நான் ஒன்னும் உன் அடிமை கிடையாது. நீ சொல்லுற இடத்துக்கெல்லாம் வந்து பேசமுடியாது.இந்தா இது என் ஆபிஸ் அட்ரஸ்.அங்க வந்திடு பேசிக்கலாம்”

“எங்க இருக்கு எனக்கு பஸ் ஏறத்தெரியாது. தமிழ் படிக்கத் தெரியாது.எந்த நம்பர் பஸ்ல வரணும்னு சொன்னா அப்பாவைக் கூட்டிட்டு வருவேன்”

“பஸ்லயா?”என்று கேட்டவன் கொஞ்சம் நிதானித்தவன் டாக்டரிடம் போய் பேசிவிட்டு வந்தவன் நீலிமாவைத் தனது காரில் ஏறச்சொன்னான்.

“இல்லை சார் நான் உங்கக் கார்ல வரலை. பஸ்லயே வர்றேன்.நான்லாம் கார்ல ஏறினா உங்க ஸ்டேட்டஸ் என்னாவாகுறது. என்னை மாதிரி ஒரு தே….”அவள் சொல்லி முடிக்கும் முன்னே அடித்திருந்தான்.

“கர்ப்பமாக இருக்கன்னு பார்க்கமாட்டேன் அடிச்சே கொன்னுடுவேன் கார்ல ஏறுடி”என்று பல்லைக் கடித்துக்கொண்டு பேசினான்.

அவளை அடிப்பதைப் பார்த்த அவளது அப்பா கிரிதரண் வேகமாக வந்தார்.

“தம்பித் தம்பி இந்த அடிக்கிற வேலையெல்லாம் வைச்சுக்காதிங்க. எதுக்கு என் மகளை அடிச்சீங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கோபத்தில் கேட்டார்.

“நீதான்யா பிரச்சனை. ஒருத்தியை ஏமாத்தி இரண்டு பொண்ணுங்களைப் பெத்துப்போட்டுட்டு விட்டுட்டு போனவன்தானே நீ. நீ ஒழுங்கா இருந்தா ஏன்டா இவளும் இவ அக்காவும் இவ்வளவு கஷ்டபடப்போறாங்க. இப்போ சாகப்போற நேரத்துல வந்து மகள்னு பாசம் கொண்டாடுற நீதான்யா இவங்களுக்குப் பிரச்சனையே” என்றதும் அவருக்கு அதன்பிறகு பேச முடியாது அமைதியாகிவிட்டார்.

“சார் உங்க லிமிட் கிராஸ் பண்ணிப் பேசுறீங்க.உங்களுக்கு எங்கப்பாவை பேச எந்த உரிமையும் இல்லை. நீங்க யாரு எங்களுக்கு?”என்று தைரியமாக அவனிடம் எதிர்த்து கேள்விக் கேட்டாள்.

“நான் யாரா? நான் யாருன்னு சத்தமாக எல்லோருக்கும் சொல்லட்டுமா?உன் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லு நான் உனக்கு யாருமில்லைன்னு”

“எதுக்கு மனசாட்சியைத் தொட்டுச் சொல்லணும்.நீங்க எனக்கு யாருமேயில்லையே. எனக்குத் தெரிஞ்சு இதுதான் பதில்.நான் யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க சார்?”

“ஓஹோ நீங்க அப்படி வர்றீங்க சரிதான்.சரி எனக்கு அக்ரீமெண்ட் போடணும்னு தோணுச்சு வந்தேன்.வேண்டாம்னா போங்க.எங்களுக்கு உங்க அக்கா ட்ரீட்மெண்ட்டுக்குப் பணம் கொடுக்க முடியாது. இதுக்குமேல நான் என்ன சொல்லமுடியும்”

அதில் கொஞ்சம் ஜெர்க்கானவள் அதை அவனிடம் காண்பிக்காது கெத்தாக “இந்த ஊர்ல நீங்க மட்டும்தான் பணம் வைச்சிருக்கீங்களா. இன்னும் நிறைய பேரு இருக்காங்க. குழந்தை இல்லாதவங்களும் நிறைய பேரு இருக்காங்க அவங்கள்ல யாராவது எங்க அக்காவுக்கு உதவமாட்டாங்களா? அப்படிப்பட்ட நல்லவங்க யாராவது குழந்தையை வாங்கிட்டு எங்க அக்கா ட்ரீட்மென்ட் பண்ணுவாங்க குழந்தையும் நல்லபடியா வளரும்”என்று தைரியமாக அவனை எதிர்கொண்டாள.

“அடிங்க என்று அவளது முடியைப் பிடித்து இழுத்து கோபத்தில் முறைத்தான்.என் குழந்தைடி என்கிட்டக் கேட்காம எவனுக்கும் குடுக்கவிடமாட்டேன்”

அவளும் அதே கோபத்தில் “முதல்ல இது என் குழந்தை இதுக்கு யாரு அப்பன்னு நான்தான் சொல்லணும்.எவன்கூட படுத்து வாங்கிக்கிட்டேன்னு நான் சொல்லணும்.அது நீயில்லன்னு சொன்னா என்ன பண்ணுவ? நீதான் சொன்னிய அன்னைக்கு நான் நான் பணத்துக்காக எவன்கூடனாலும் போவேன்னு அப்படி…”

“வாயை மூடு.. இதுக்குமேல ஒரு வார்த்தைப் பேசுன கழுத்தை நெறிச்சுக் கொன்னுறுவேன்டி!” அவனும் கத்தினான்.

இவங்களுக்குள்ள என்ன பிரச்சனை என்று தெரியாத நீலிமாவின் அப்பா”ஐயோ எதுக்கு இரண்டுபேரும் அடிச்சிக்கிறீங்க? அவளை விடுங்க சார் ஒருத்தி உயிருக்குப் போராடுறா ஒருத்தி வாழ்க்கைக்காகப் போராடுறா. நடுவுல ஏன் சார் நீங்க வேற அவங்களைக் கஷ்டப்படுத்துறீங்க” என்று ஒரு அப்பாவாக இப்போது வருத்தப்பட்டார்.

அதைக்கேட்டதும் அவரது கையில் கொஞ்சம் காசைக் கொடுத்து “உங்க மூத்த மகளோட ட்ரீட்மெண்டுக்காக நான் பணம் தர்றேன்.அதுக்கான பேப்பர்ஸ் ரெடி பண்ணிருக்கேன்.உங்க மகளை வந்து சைன் பண்ணிட்டுப் போகச்சொல்லு. நீங்க இவளைக் கூட்டிட்டு வந்திடுங்க. பஸ்ல வரவேண்டாம் டேக்ஸில பார்த்துக் கவனமாக கூட்டிட்டு வாங்க”என்றவன் நீலிமாவை முறைத்துவிட்டுப் போய்விட்டான்.

அவன் கையில் வைத்தப் பணத்தை பத்திரப்படுத்தியவர்”ஏன்மா அவருக்கூட சண்டைப்போடுற? அவருதானே அக்கா ட்ரீட்மெண்ட்டுக்கு உதவுறவரு. நீ சண்டைப்போட்டா பணம் யாரு தருவாங்க”என்று வாழ்க்கையில் பட்ட அனுபவத்தில் அமைதியாகப் போகச்சொன்னார்.

அவளும் இப்போது கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவரோடுக்கூட டேக்ஸியில் அவனது ஆபிஸிற்குச் சென்றார்.

அங்கேபோய் இறங்கியதும் அந்த ஆபிஸையும் அது இருக்கும் இடத்தையும் பார்த்தவளுக்கு நம்ம இப்போ இருக்கிற இந்த நிலையில் உள்ளப்போனாலே யாரும் மதிக்கமாட்டாங்க. இதுல நான் அவன்கூட வாழ்ந்தேன்னு சொன்ன கேலிக்கூத்தாக்கி சிரிப்பாங்க.அதுசரி நம்ம வாங்கி வந்தவரம் அப்படி. நம்ம குழந்தையாவது நல்லபடியா வசதி வாய்ப்புகளோடு வாழட்டும்”என்று நினைத்தவளுக்கு ஏனோ அழுகை அவளையும் மீறி வந்தது.

அதைக் கட்டுப்படுத்தினாலும் அவளை அறியாது கண்ணீர் வடிய வேகவேகமாகத் துடைத்துவிட்டு உள்ளே வந்து அவன் கொடுத்தக் கார்டினை நீட்டினாள்.

அமெரிக்கா லிங்

https://www.amazon.com/dp/B0F283QHW2

இங்கிலாந்து லிங்

https://www.amazon.co.uk/dp/B0F283QHW2

இந்தியா லிங்

https://www.amazon.in/dp/B0F283QHW2